வடக்கு மாகாண பாடசாலை அணிகளுக்கு இடையிலான கொக்கி போட்டியில் யாழ்ப்பாண கல்லூரி சம்பியன்!
வடமாகாண ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான கொக்கி போட்டிகள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கடந்த வார இறுதியில் இடம்பெற்றது.
இதன் பொழுது under 20 அணியில் வடமாகாண ரீதியாக தகுதிபெற்ற 9 அணிகள் போட்டியிட்ட நிலையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 20வயதிற்குட்பட்ட அணி வடமாகாண சம்பியனானதோடு தேசிய மட்டத்திற்கும் தெரிவாகியுள்ளது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.சி.பிரானசிஸ் கல்லூரியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை