• Breaking News

    ஐ.நாவின் முதல்நாள் அமர்விலேயே பேசப்பட்ட இலங்கை தொடர்பான விடயங்கள் - ஐ.நாவின் பிடியினுள் சிக்கப்போகும் இலங்கை?

     


    ஐ.நா மனித உரிமையில் இன்று ஆரம்பித்த 51வது அமர்வின் முதலாம் நாள் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விடயம் எடுக்கபட்டமை சிறிலங்காவுக்கு பாதகமாக மாறியுள்ளது.

    அமர்வு ஆரம்பித்த பின்னர் முதலாவது விடயமாக மியன்மார் நிலவரங்கள் எடுகப்பட்ட பின்னர், உடனடியாகவே சிறிலங்கா தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கபட்டது.

    இந்த அறிக்கையை வெளியிட்ட பதில் ஆணையாளர், இலங்கையின் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனையடுத்து சிறிலங்கா அரசதரப்பு தனது தரப்பில் கருத்துதெரிவித்த பின்னர், மேற்குலக நாடுகள் இலங்கையில் ஜனநாயகம் திரும்பவேண்டும், பொறுப்புக்கூறப்படவேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்திய அதேவேளை, சிறிலங்கா ஆதரவு நாடுகள் சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தன.

    இன்று மதிய இடைவேளைக்குப் பின்னரும் இலங்கை நிலவரங்கள் மீதான விவாதம் தொடரவுள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad