திருநங்கையை திருமணம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் - பின்னர் நிகழ்ந்த சம்பவம்!
உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வரும் காவலர் தன்னை திருமணம் செய்து அடித்து துன்புறுத்தி 110 சவரன் நகை மற்றும் 4 லட்சத்து 50 ஆயிரம் பணம் பறித்துக் கொண்டதாக திருநங்கை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் புதுப்பட்டி அரண்மனை தோட்டம் பகுதியை சேர்ந்த பபிதா ரோஸ் என்ற திருநங்கை உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆய்வாளர் பாலகிருஷ்ணனிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கடந்த ஏப்ரல் மாதம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலருக்கு உணவு ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தேன்.
அப்போது அங்கு பணியில் இருந்த உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி சிறப்பு காவல் படை காவலர் கடலூர் மாவட்டம் கீழ வன்னியூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 27)என்பவர் என்னிடம் பேசி எண் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டு அடிக்கடி பேசி வந்ததாகவும் பின்னர், திருமணம் செய்து கொள்வதாக கூறி தொந்தரவு செய்தார்.
அப்போது நான் ஏற்கனவே திருமணம் செய்து பாதிக்கப்பட்டவள் என கூறி திருமணத்திற்கு மறுத்த போதும் என்னை விடாமல் தொந்தரவு செய்து திருமணம் செய்து கொள்வதாக கூறியதை அடுத்து கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உறவினர்கள் முன்னிலையில் கார்த்திக்குடன் திருமண நடைபெற்றது.
அதன் பிறகு இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கார்த்திக்கு ஏற்கனவே திருமணம் ஆனது எனக்கு தெரிய வந்தது. இது குறித்து கேட்ட போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 11ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது என்னை கம்பியால் தாக்கி,
கட்டிப்போட்டு 110 பவுன் நகை மற்றும் ரூபாய் 4,50,000 பணம், செல்போன், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும், படுகாயம் அடைந்த நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று புகார் கொடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புகார் மனுவில் தன்னிடம் பறித்துக் கொண்ட 110 சவரன் நகை மற்றும் ரூ. 4.50 லட்சம் பணத்தை பெற்றுத் தருமாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். சிறப்பு காவல் படை காவலர் மீது திருநங்கை அளித்த புகார் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை