மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் கீழே தவறி விழுந்து மரணம்!
திருகோணமலை - வான் எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆயிலியடி சந்தியில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
வான் எல பகுதியில் இருந்து சிறாஜ்நகர் 97ஆம் கட்டைக்கு நேற்று காலை 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்று பயணித்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்த நிலையில் அதில் பயணித்த பெண்ணும் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
சிராஜ் நகர் 97ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான 44 வயதான ஆர்.பௌவுசியா எனும் பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை வான் எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை