தஞ்சை பெரிய கோவிலை திரும்பி பார்க்க வைத்த டுவிட்டர் பதிவு! இவ்வளவு அதிசயங்களா?
தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானத்தையும் அதன் நுட்பமுறைகளையும் பார்த்து மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா வியப்படைந்துள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இத்தனை நுட்பமுறைகளை பயன்படுத்தி பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டியுள்ளார் என்பது இக்கால தொழிநுட்பத்தையே திரும்பி பார்க்க வைக்கிறது.
அந்த வகையில் பிரபல டிசைனர் ஷ்ராவன்யா ராவ் பீட்டி, தஞ்சை பெரிய கோவில் பற்றி பதிவிட்ட வீடியோ ஒன்றை பார்த்து அவர் இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் “வீடியோ பதிவை பார்த்து வியந்ததாகவும் சோழ சாம்ராஜ்யத்தின் சாதனைகள், மேம்பட்ட அறிவுத்திறமை போன்றவற்றை நாம் பாராட்ட தவறியதாகவும் அவர்களின் சரித்திரத்தை உலகிற்கு உணர்த்த மறந்துவிட்டதாகவும்” பதிவிட்டுள்ளார்.
500 வருடங்களுக்கு முன்னார் கட்டப்பட்ட தாஜ் மஹாலை கொண்டாடும் உலகம் 1000 வருடங்களுக்கு முன்னாள் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலை இன்னும் பாராட்டவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. தஞ்சை கோயில் தமிழரின் கலைத்திறமையையும், பாரம்பரியத்தையும் உலகிற்கு எடுத்துச் சொல்கிறது.
அந்த வகையில் தஞ்சை பெரிய கோயிலின் வடிவமைப்புககளில் சில தமிழ் எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.
உதாரணமாக உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி, இது போன்று தமிழின் உயிர் எழுத்துக்கள் 12 ஆகும்.சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி. இதே போல் தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி, இதே போல் தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி, இதபோன்று தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும்.
தஞ்சை பெரிய கோயிலின் அமைக்கப்பட்டுள்ள விமானத்தின் உயரம் 216அடி உயரம் கொண்டது. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60மீ உயரமாக இக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அடி உயரம் கொண்ட லிங்கம் தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும். தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி தஞ்சைக் கோயிலின் தோற்றம் பதிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது.
இத்தனை பெறுமையும் தஞ்சை பெரிய கோவிலையும் தமிழர்களின் சிறப்பையும் நாம் கவனிக்க தவறியதாகவே ஆனந்த் மஹிந்திரா கவலை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை