வாகனம் திருத்தும் நிலையத்திற்கு அருகில் கடிதத்துடன் மீட்கப்பட்ட கைக்குழந்தை!
பண்டாரவளை தியத்தலாவ பகுதியில் கடிதத்துடன் கைவிடப்பட்ட ஒரு மாதக் கைக்குழந்தை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
பண்டாரவளையில் உள்ள வாகனங்கள் திருத்தும் இடத்திற்கு அருகிலேயே குறித்த கைக்குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கடிதத்துடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் திருத்தும் இடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் குழந்தையை குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைக்குழந்தையுடன் மீட்கப்பட்ட கடிதத்தில், “குழந்தையை குறித்த இடத்தில் விட்டுச் சென்றவர் சிறிது நேரத்தில் மீண்டும் குழந்தையை எடுத்துச் செல்வதாகவும், அதுவரை குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறும்” குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தை தற்போது தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை