படுகொலை செய்யப்பட்ட கிரிசாந்தியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தமிழ் தேசிய கூட்டணியின் எற்பாட்டில் யாழ். செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி குமாரசாமி கிரிசாந்தியின் 26வது ஆண்டு சிராத்த தின நினைவேந்தல் இன்று செம்மணி வீதி சந்தியில் நடைபெற்றது.
தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன், உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு உருவப்படத்திற்கான மலர் அஞ்சலியும் செலுத்தியதுடன் நினைவேந்தலினையும் செலுத்தினர்.
கருத்துகள் இல்லை