நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்குமாயின் அத்தனகல, களு, களனி, கிங் மற்றும் நில்வள கங்கைகளின் நீர் மட்டம் அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக குறித்த கங்கைகளை அண்மித்து வாழ்பவர்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு நாளை பிற்பகல் 4 மணிவரையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை