மாமியாரின் கையை கடித்து குதறிய மருமகள் - தடுக்க வந்த கணவனுக்கு கன்னத்தில் பளார்
இந்தியாவில் தொலைக்காட்சியை ஆஃப் செய்த மாமியரின் கையை மருமகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியைச் சேர்ந்தவர் விருஷாலி. 60 வயதான இவர் வீட்டில் பஜனை பாடி கொண்டிருந்தார். அப்போது மருமகள் விஜயா அதிக சத்தத்துடன் டிவி பார்த்து கொண்டு இருந்துள்ளார்.
தான் பஜனையில் இருப்பதால் டிவியின் சத்தத்தை குறைத்து பார்க்கும் படி மாமியார் கேட்டுக்கொண்டுள்ளார். எனினும் அதை காதில் வாங்காத மருமகள் சத்தத்தை குறைக்காமல் டிவி பார்த்துள்ளார்.
இதனையடுத்து மாமியார் விருஷாலி டிவி வந்து ஆஃப் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மருமகள் விஜயா மாமியாரின் விரல்களை கடித்துள்ளார்.
இந்த நிலையில் , மாமியாரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது மகன் மனைவியை தடுக்க முயற்சி செய்த கணவனை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.
அதன் பின்னர் மாமியார் விருஷாலியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுடன் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை