• Breaking News

    யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய தீயணைப்பு வாகனம்!


     யாழ்ப்பாண மாநகர சபைக்கு தீயணைப்பு புதிய வாகனம் ஒன்று இம்மாத நடுப்பகுதியில் கையளிக்கப்படவுள்ளது. 

    அந்த தீயணைப்பு வாகனம் நீர் விசிறி பரீட்சார்த்த நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

    இவ் நிகழ்வில்  யாழ். மாநகர  பதில் முதல்வர் து.ஈசன் மற்றும் யாழ். மாநகர ஆணையாளர் வ.ஜெயசீலன்,மாநகர உறுப்பினர் வ.பார்த்தீபன்உள்ளிட்ட நன்கொடையாளர்கள் மற்றும் தீயணைப்பு உத்தியோகத்தர்கள் என பலரும கலந்து கொண்டனர்.

    யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு பிரிவில் இருந்த தீயணைப்பு வாகனம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நீர்வேலியில் இடம்பெற்ற விபத்தில் முழுமையாக சேதமடைந்தது. இதன்பின்னர் மாநகர சபைக்கான தீயணைப்பு வாகனம் இல்லாதிருந்ததுடன் இது தொடர்பில் 2020 இல் அரசிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. எனினும் அதற்கான கடிதம் இன்றுவரை கிடைக்கவில்லை.

    இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்திற்கு அவசரமாக ஒரு வாகனம் தேவையென்பதை கருத்தில் கொண்டு வர்த்தக சங்கமும் கொடையாளர்களுடன் பேச்சுவார்த்தை  நிதியையும் ஏற்பதாகவும் இதனை பெற்று மாநகர சபைக்கு வழங்குவதாக உறுதியளித்த நிலையில் இந்த தீயணைப்பு வாகனம் ஜப்பானில் இருந்து கொண்டுவரப்பட்டது.

    இதற்கு கொழும்பில் வைத்து இயந்திர பகுதி , நீர் விசிறல் பகுதி, குழாய்கள் என்பன recondition செய்யப்பட்டதுடன். 1300 லீற்றர் நீர் கொள்ளவு உடையதாகும். என்பது குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad