மன்னார் அன்னை இல்ல சிறார்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகள்! (படங்கள் இணைப்பு)
மன்னார் அன்னை இல்ல சிறார்களின் தலைமைத்துவத் திறனை மேம்படுத்துவதற்கான தலைமைத்துவ, திறன் விருத்தி பயிற்சிகள் கடந்த சனிக்கிழமை (02) நடைபெற்றது.
பயிற்சி நெறியின் வளவாளர்களாக Sri lanka Units இன் முல்லைத்தீவு நிலைய முகாமையாளர் சுதர்சினி மற்றும் Sri lanka Unites வடமாகாண இணைப்பாளர் நக்கீரன் கலந்து கொண்டனர்.
அனைத்து பங்கேற்பாளர்களும் சுறுசுறுப்பாகவும், திறம்படவும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதால், தலைமைத்துவத் திட்டம் குழந்தைகளின் தலைமைப் பண்புகளை மேம்படுத்துவதற்கான அதன் முன் நோக்கத்தை அடைவதில் மிகவும் வெற்றிகரமாக இருந்தது என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை