இலங்கை பெண் குமுதினி க்கு அநியாயம் செய்து நடிகர் பிரசாந்!
நடிகர் பிரசாந்த் மீது இலங்கையை சேர்ந்த குமுதினி எனும் பெண் மோசடி புகார் அளித்துள்ள தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு வந்த குமுதினி என்ற பெண் நடிகர் பிரசாந்த் மீது பண மோசடி புகாரை வாய் மொழியாக அளித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுவிட்சர்லாந்தில் விமான ஊழியராக பணியாற்றி வரும் அந்த பெண்ணுடன் நட்புக் கொண்ட நடிகர் பிரசாந்த் அவரிடம் ரூ. 10 லட்சம் வரை ஏமாற்றி பணம் பறித்து விட்டதாக அந்த பெண் பரபரப்பு குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளார்.
சென்னையில் உள்ள பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அந்த பெண் மீது நடிகர் பிரசாந்த் தரப்பும் புகார் கொடுத்துள்ளது.
மேலும், அந்த பெண் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்றும் வேண்டுமென்றே பெயரைக் கெடுக்க செய்யும் சதி என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திடீரென சுவிட்ஸர்லாந்தில் விமான ஊழியராக வேலை பார்க்கும் பெண் ஒருவர் நடிகர் பிரசாந்த் மீது இப்படியொரு புகாரை சுமத்தியிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இது குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை