தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு யாழ் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் சிறப்பு நிகழ்வுகள்! (படங்கள் இணைப்பு)
தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு யாழ் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் காலை சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நற்கருணை ஆராதனையும் இடம்பெற்றது. தொடர்ந்து ஆலய சூழலில் சிரமதானமும் இiளையோருக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றது.
மேலும் பருத்தித்துறைப் பங்கில் காலை சிறப்புத் திருப்பலியைத் தொடர்ந்து அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்திரு வின்சஸ் அவர்களால் இளையோருக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
குருநகர் பங்கின் புனித யாகப்பர் ஆலயத்தில் காலை சிறப்புத்திருப்பலியும் தொடர்ந்து மாலை விளையாட்டு நிகழ்வும் இடம்பெற்றன.
கருத்துகள் இல்லை