• Breaking News

    பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தவர் பிணையில் விடுதலை!

     


    மருதானையில் கடந்த 30ஆம் திகதியன்று நடைபெற்ற போராட்டத்தின் போது பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லஹிரு வீரசேகரவை 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

    நேற்று கைது செய்யப்பட்டிருந்த அவர், திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் இன்றையதினம் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் இன்று தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் அவரை மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad