முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி!
முல்லைத்தீவு வசந்தநகர் பகுதியில் செயலிழந்த நிலையில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக, கிளிநொச்சி முல்லைத்தீவு இராணுவ கட்டளை அதிகாரி மற்றம் 57வது படைப்பிரிவு கட்டளை அதிகாரி ஊடாக பொலிசாருக்கு குறித்த தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலிற்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி வசந்த நகர் பகுதியில் குறித்த அகழ்வுப்பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, செயலிழந்த நிலையில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
கருத்துகள் இல்லை