கொழும்பில் சிறுமியை சீரழித்தவருக்கு நேர்ந்த கதி!
கொழும்பில் சிறுமியின் பாதுகாப்புக்காக வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த 62 வயது நபர் ஒருவர், அச் சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.
கொழும்பு உயர் நீதிமன்றம் அவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது.
இத் தண்டனைக்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று லட்சம் இழப்பீடு வழங்கும்படியும் உயர் நீதிமன்ற நீதியரசர் நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டார்.
குறித்த நபர் 2017 ஆம் ஆண்டு 13 வயதான சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியதாக சட்டமா அதிபர் 2020 ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
சிறுமியின் பாதுகாப்புக்காக உறவினரான 62 வயது நபரை வீட்டில் விட்டு விட்டு தாய் கணவரை பார்க்க சென்றுள்ளார்.
அந்த சந்தர்ப்பதத்தில் குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை