வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அபாயகரமான பொருளுடன் இலங்கையில் சுற்றியவர் அதிரடியாக கைது!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் புலத்சிங்கல கல்லுமலே வீதியில் சுற்றித்திரிந்த ஒருவர் இன்று (09-09-2022) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புலத்சிங்கல அத்துர பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புளத்சிங்கள மேல் வெல்கம பிரதேசத்திற்கு இந்த நபர் கைக்குண்டுடன் வருவதாக புலத்சிங்கள பொலிஸாரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று வீதியை காத்து இவரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் நாளை (10) மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் புலத்சிங்கல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி துலாஞ்சன ஏக்கநாயக்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை