• Breaking News

    இலங்கைக்கு ஐந்து வருடத்திற்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்குவதற்கு முன்வந்த நாடு!


     இலங்கைக்கு ஐந்து வருடத்திற்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்குவதற்கு சவூதி அரேபியா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

    அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட பிரதிநிதியாக சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்திருந்த சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், அந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்ததார்.

    குறித்த கலந்துரையாடலின் போது 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிபொருளை கடன் அடிப்படையில் இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

    மேலும் இதன் போது விவசாய உரங்களை உற்பத்தி செய்தல், பெட்ரோலிய சேமிப்பு வசதிகளை நிர்மாணித்தல், எரிபொருள் விநியோக நிலையங்களை நிறுவுதல், எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை நவீனமயமாக்குதல் மற்றும் விரிவுபடுத்துதல், கனிமங்களை அகழ்வதற்கான வாய்ப்புகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவித்தல் போன்றவற்றுக்கு இலங்கையில் சவூதியின் முதலீடுகளைப் பெறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad