• Breaking News

    திருமணம் தடைப்பட்ட விரக்தியில் தலைமை காவலரை கடித்துக் குதறிய மணப்பெண்!

     


    திருமணம் தடைப்பட்ட விரக்தியில் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்ட பெண், தலைமை காவலரின் சட்டையை கிழித்து கையை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    வடசென்னை திருவொற்றியூர் எஸ் பி கோவில் பகுதியில் வசித்து வருபவர் ரேவேந்திரன் தனியார் வங்கி ஊழியரான இவரும் புதுவண்ணாரப்பேட்டை பூணடிதங்கமாள் தெரு பகுதியில் வசித்துவரும் செல்வி என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17 அன்று திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது


    இந்நிலையில் மணமகன் வீட்டாரிடம் திருமணத்திற்கு முன்பே மணமகள் செல்வி 5 சவரன் நகை, இரு சக்கரவாகனம் மற்றும் ஒரு லட்ச ருபாய் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்பட்டநிலையில் திருமணம் ரத்து செய்யப்பட்டது.


    இதனால் விரக்தியடைந்த செல்வி அவ்வபோது ரேவேந்திரன் வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.


    இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் காதலன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்ட நிலையில், மணமகன் வீட்டினர் காவல்நிலையத்திற்கு போன் செய்துள்ளனர்.


    இதையடுத்து திருவொற்றியூர் காவல் நிலைய தலைமை காவலர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று சமரசம் பேச முற்பட்ட நிலையில், பேச்சை கேட்காமல் குறித்த பெண் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.


    அதை செல்போனில் படம் பிடித்த தலைமை காவலரின் வலது கையை பிடித்து கடித்த செல்வி, தலைமை காவலர் சரவணனின் சட்டையை பிடித்து கிழித்துள்ளார்.


    திருமணம் நின்ற விரக்தியில் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று சண்டையிட்டதும், தடுக்க சென்ற காவலரின் கையை பிடித்து கடித்துவிட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad