மகாராணி எலிசபெத்தின் மரணம் தொடர்பாக வெளிவந்த பகீர் தகவல்!
பிரித்தானிய மகாராணி எலிசபெத் எலும்பு தொடர்பான பிரச்சனையால் உயிரிழந்தார் என அரச குடும்ப வரலாற்று ஆய்வாளர் லேடி கொலின் காம்ப்பெல் தெரிவித்துள்ளார்.
ராணியார் கடந்த 8ம் திகதி அமைதியாக உயிரிழந்தார் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு என்ன உடல்நலப்பிரச்சனை இருந்தது என்பது தொடர்பில் தற்போது அரச குடும்ப வரலாற்று ஆய்வாளர் லேடி கொலின் காம்ப்பெல் கருத்து வெளியிட்டுள்ளார்.
மகாராணி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னரே அவர் இறந்துவிட்டார் என லேடி கொலின் காம்ப்பெல் காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
அந்த காணொளியில், மகாராணி எலும்புகள் தொடர்பான தீவிரமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார் என தெரிவித்திருந்தார்.
ராணியாரின் இறப்புக்கான காரணத்தை royal palace அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தவில்லை என்றாலும் அவர் ஒருவகையான எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டதாக லேடி கொலின் காம்ப்பெல் கூறுகிறார்.
மேலும் ராணியின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, நோய் தொடர்பாக துல்லியமாக தெரிவிக்கும் வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை எனவும் லேடி கொலின் காம்ப்பெல் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவரது இறப்புச் சான்றிதழில் அரச மருத்துவக் குழுவின் தலைவரான சர் ஹூ தாமஸ் வயது முதிர்வால் இறப்பதாக கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 இல் ராணியின் கணவர் இளவரசர் பிலிப்பின் மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணத்தையும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிடவில்லை.
இரண்டாவது எலிசபெத் மகாரணியின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 19 ஆம் திகதி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக ஏற்கனவே அவரது உடல் ஸ்கொட்லாந்தில் இருந்து லண்டனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உடல் மக்களின் அஞ்சலிக்காக தற்போது பகிங்ஹாம் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து வேல்ஸ் முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் பிரித்தானிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை