பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்புக்களில் 17 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போது போதைப் பொருள் வைத்திருந்தமை, சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சுமார் 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மூன்று மதுபான சுற்றிவளைப்புகளில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 29 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு செப்புத் தகடு, ஒரு இரும்பு பீப்பாய், ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கம்பஹா பூகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பூகொட, பேலியாகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 43, 46 மற்றும் 47 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மாணிக்கக்கல் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கம்பளை ரேந்தபொல பிரதேசத்தில் ஒரு தொகை கழிவுத் தேயிலையுடன் பயணித்த ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளார்.
ஏத்கால பிரதேசத்தை சேர்ந்த 43 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 8 கிராம் 807 மில்லிகிராம் கழிவுத் தேயிலையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அம்பாறை கல்முனை பிரதேசத்தில் 7 கிராம் 870 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கல்முனைக்குடி 12 பிரேதசத்தை சேர்ந்த 34 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கதிர்காமம் திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திவுல்பல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 27 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொகவந்தலாவை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எண்மரை பொலிஸார் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொகவந்தலாவை, டெவன்பொட் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 30, 61 வயதுகளையுடைய எண்மரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மாணிக்கக்கல் அகழ்வுக்காக பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கருத்துகள் இல்லை