எதிர்காலத்தில் முதியோர் இல்லங்களை புறந்தள்ள வேண்டும் - பாலகிருஷ்ணன் தெரிவிப்பு!
முதியோர் இல்லங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது புறந்தள்ள வேண்டும் என இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ். மாவட்ட கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
நவ மங்கை நிவாசத்தில் இன்று இடம்பெற்ற முதியோர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எந்த கஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும் நாங்கள் குழந்தைகள் பேரப்பிள்ளைகளுடன் குடும்பத்திலேயே வாழ வேண்டும். தற்போதைய இளைஞர் சமுதாயம் ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும், எங்களை அன்பு பாராட்டி நல்வழிப்படுத்தி பாலூட்டி வளர்த்த தாயும் தகப்பனையும் முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிட்டு வெளியிலே அவர்களை கலைத்துவிட்டு நாம் சந்தோசமாக வாழ்வதென்றால் அது ஒரு வாழ்க்கையா என நாங்கள் சிந்திக்க வேண்டும்,
கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவம் பற்றி இந்து சமயம் திறமையாக கூறுகின்றது உண்மையை கூறுகின்றது, கூட்டு குடும்பத்தை சீரழித்தது இந்த மேற்கத்தேய கலாச்சாரம் ஆகவே தற்போது வளர்ந்து வரும் இளைய சமுதாயம் எமது பெற்றோர்கள் உறவினர்களை வீடுகளில் இருந்துபராமரிக்க முன்வரவேண்டும் இனிவரும் காலங்களில் முதியோர் இல்லங்களை வரவேற்காமல் வீடுகளில் இருந்து முதியோர்கள் ,உறவினர்களோடு வாழ்வதுதான் சிறந்தது என்றார்.
கருத்துகள் இல்லை