இலங்கையில் காலாவதியாகவுள்ள கோவிட் தடுப்பூசிகள்!
நாட்டில் எதிர்வரும் 31ஆம் திகதி சுமார் அறுபது இலட்சம் கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் மூன்றாம் தடுப்பூசியாக அல்லது பூஸ்டர் தடுப்பூசியாக மக்களுக்கு ஏற்றும் நோக்கில் இந்த தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட ஆறு மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே துரித கதியில் வைத்தியசாலைகளுக்கு சென்று இந்த பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறு தொற்று நோய் தடுப்பு பிரிவு, பொதுமக்களிடம் கோரியுள்ளது.
குறிப்பாக நாட்பட்ட நோய்களை உடையவர்கள், அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் அருகில் உள்ள வைத்திசாலைக்கு உடன் சென்று இந்த பைசர் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.30 வயதுக்கும் மேற்பட்ட 140 இலட்சம் பேர் இலங்கையில் வாழ்ந்து வருவதாகவும், இவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இவர்களில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 8 மில்லியன் சனத் தொகை மட்டுமேயாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் விரைந்து தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் மூலம் கோவிட் ஆபத்தினை தவிர்க்க முடியும் என தொற்று நோய் தடுப்பு பிரிவு வலியுறுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை