யாழ். கோட்டை பகுதியில் பொலிஸாருடன் இணைந்து எமது திடீர் சுற்றிவளைப்புகள் இடம்பெறும் - யாழ். முதல்வர் தெரிவிப்பு
யாழின், புராதன சின்னமாகக் காணப்படும் யாழ் . கோட்டைப் பகுதியிலே மிகப் பெரியளவிலான கலாசார சீரழிவுகளும், போதைப்பொருள் பாவனைகளும் இடம்பெறுகின்றதாக பல்வேறு சமூக ஆர்வலர்களால் எமக்கு சுட்டிக் கட்டப்பட்டிருக்கின்றன என யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
கோட்டை பகுதியில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்வேறு மட்டங்களில் இதன் பிரதிபலிப்பு உணரப்பட்ட நிலையில் பொலிஸாருடனும் , இது தொடர்பாக வெவ்வேறு தரப்பினர் தொடர்புகளை மேற்கொண்டு இதனை கட்டுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
நீதிபதிகளும் இது தொடர்பாக யாழ். மாநகரசபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.
யாழ். கோட்டைப் பகுதியினை சுற்றி இருக்கின்ற பற்றைக்காடுகளை அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இதனடிப்படையில் நான் இன்றைய தினம் நேரடியாக கோட்டைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு இங்கு நடைபெறுகின்ற விடயங்களை அவதானித்தேன். இதன் போது எங்கள் கண் முன்னே சமூதாய சீரழிவுகளும் , போதைப்பொருள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
எனவே எதிர்காலத்தில் இந்த பகுதி திடீர் திடீரென பொலிஸ் உடனான எங்கள் சுற்று வளைப்புக்கள், கண்காணிப்பு பணிகளுக்குள் உள்ளாக்கப்படும் என பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம் - என்றார் .
கருத்துகள் இல்லை