• Breaking News

    மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின...

     

    TAMILUS


    தடம்புரள்வு காரணமாக தடைபட்ட மலையக ரயில் சேவைகள் நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

    பதுளையிலிருந்து நேற்று (28) கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்ற ரயில் ஹட்டன் கொழும்பு பிரதான ரயில் பாதையில் மாலை 4.15 மணியளவில் ஹட்டனுக்கும் ரொசல்ல ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.

    இதனால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்புக்குள்ளானதுடன் பயணிகளும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.

    இந்நிலையில் ரயில் திணைக்களத்தின் ஊழியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இணைந்து ரயில் பாதையினை சீர் செய்யும் பணியில் ஈடுப்பட்டதனை தொடர்ந்து நள்ளிரவு முதல் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

    இதே நேரம் நேற்று நானுஓயாவில் இருந்து புறப்படவிருந்த இரண்டு ரயில் பயணங்கள் தடம்புரள்வு காரணமாக இரத்தச்செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad