• Breaking News

    பத்து நாளில் 2 கிலோ வரை எடை குறைய பின்பற்ற வேண்டிய எளிய 10 குறிப்புகள்

     ஒருவர் தன் உடல் உயரத்திற்கு ஏற்ப சரியான எடையுடன் இருந்தால் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம் ஆகிறது. உயரத்துக்கு மீறிய உடல் எடையை கொண்டவர்கள், அதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சமன் செய்து விட வேண்டும். இல்லை என்றால் நாளடைவில் சிறுக சிறுக உடல் எடை கணிசமாக உயர்ந்து பிறகு அதை குறைப்பது என்பது ரொம்பவே பெரிய சவாலாக மாறிவிடும். இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை உடல் எடையை குறைப்பதில் தினமும் நிறையவே சிரமப்படுகிறார்கள் என்கிறது ஆய்வுகள். இப்படி பரவலாக காணப்படும் உடல் எடை பிரச்சனையை 10 நாட்களில், இந்த பத்து குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.


    நாம் அன்றாட வாழ்வில் இந்த பத்து குறிப்புகளை பின்பற்றி வந்தால் போதும், பத்தே நாட்களில் இரண்டு கிலோ எடை வரை குறைத்து விடலாம். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் போகப் போக இது உங்களுக்கு தன்னம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுக்கும். இதனால் உங்கள் உடல் எடையை குறைப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். அத்தகைய அற்புதமான எளிய இந்த பத்து குறிப்புகள் என்னென்ன? என்பதை இனி பார்ப்போம்.

    குறிப்பு 1: தினமும் 1 மணி நேரம் கண்டிப்பாக ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தசைகள் வலுப்பெற செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால் போதும்.


    குறிப்பு 2: உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரவு நேரத்தில் அதிக அளவு உணவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டுவிட்டு பிறகு தூங்க செல்லுங்கள்.

    குறிப்பு 3: கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள உணவு வகைகளை முற்றிலுமாக தவிர்த்து விட்டு, சுண்டல் மற்றும் பழங்கள், எளிய உணவுகள் போன்றவற்றை ஆறு முறையாக ஒரு நாளைக்கு பிரித்து உண்ண வேண்டும். காலை, மதியம், இரவு என்று 3 முறை சாதாரண உணவும், நொறுக்கு தீனி சாப்பிட வேண்டும் என்றால் இடையிடையே 3 முறை சுண்டல், பழங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.



    குறிப்பு 4: நீங்கள் எந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் இடையிடையே இரண்டு மணி நேரத்திற்கு 4 முறையாவது எழுந்து சிறிது நேரம் நடந்து விட்டு வந்து அமர்ந்து வேலை செய்யுங்கள். 





    குறிப்பு 5: தினமும் ஒரு கப் அளவிற்கு 5 வகையான பழங்கள் அல்லது காய்கறிகள் போன்றவற்றை பிரஷ்ஷாக எடுத்துக் கொள்ள வேண்டும்

    குறிப்பு 6: ஒரு நாளைக்கு அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து குறைந்தபட்சம் 6 நிமிடமாவது கண்களை இறுக மூடி மனதை ஒருமுகப்படுத்தி தியான நிலையில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் வேறு எந்த ஒரு சிந்தனையும் மனதில் இருக்கக் கூடாது.




     குறிப்பு 7: ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 7 டம்ளர் அளவிற்கு கண்டிப்பாக தவிர்க்காமல் தண்ணீர் பருக வேண்டும். அதற்கு மேலும் எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை ஆனால் குறைவாக எடுத்துக் கொள்ளக் கூடாது.



    குறிப்பு 8: பகல் நேர தூக்கத்தை தவிர்த்து, இரவில் கண்டிப்பாக எக்காரணத்தை கொண்டும் 8 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்கக்கூடாது.




    குறிப்பு 9, 10: ஒரு நாளைக்கு 9000 அடி முதல் 10,000 அடி தூரம் வரை எங்காவது நடந்து சென்று வாருங்கள். இந்த பத்து விஷயங்களையும் 10 நாட்கள் கஷ்டப்பட்டு செய்து பாருங்கள். உடல் எடை உடல் முழுவதும் சமச்சீராக குறையும். சிக்குனு ஸ்லிம் ஆகி விடுவீர்கள்.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad