முடக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்பது எப்படி?`
சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று சொல்வதைவிட, அது நம்முடைய தினசரி வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டது எனலாம். அதிலும் குறிப்பாக, இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஃபோட்டோ, வீடியோ, ரீல்ஸ் என நேரத்தை செலவிட ஏற்ற இடமாக இருக்கும் இந்த வலைதளத்தில், ஏதோ ஒரு காரணத்தால் திடீரென உங்கள் கணக்கு முடக்கப்பட்டால் எப்படி அதனை மீட்டெடுப்பது என்பது குறித்து பார்க்கலாம்...
இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஏன் முடக்கப்படுகின்றன?
* Instagram-ன் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத கணக்குகள் இடைநிறுத்தப்படலாம். குறிப்பாக, பாலியல் செயல்பாடு, கிராஃபிக் வன்முறை, ஸ்பேம், வெறுக்கத்தக்க பேச்சு, கொடுமைப்படுத்துதல், துஷ்பிரயோகம், பயங்கரவாதம், மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பான போஸ்ட்களை தடை செய்கிறது இன்ஸ்டாகிராம். மீண்டும் மீண்டும் இதுபோன்ற கருத்துகளை பதிவிடுபவர்களுக்கு தடை விதிக்கப்படலாம்.
* அரசாங்கம் அல்லது சட்ட அமலாக்கத்தின் வேண்டுகோளின் பேரில் பயனர் கணக்குகள் பொதுப்பார்வையில் இருந்து நிறுத்தப்படலாம்.
* லைக் அல்லது ஃபாலோ பட்டன்கள் மூலம் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை கவனித்தால், பொதுவாக 24 முதல் 48 மணிநேரம் வரை கணக்குகள் முடக்கப்படும்.
முடக்கப்படும் கணக்குகளை எப்படி மீட்டெடுப்பது?
* இன்ஸ்டாகிராம் உதவி மையத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம், கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் மற்றும் மதிப்பாய்வு செய்யக் கோரலாம்.
*முதலில் உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கின் பயனர் பெயரை குறிப்பிட்ட பிறகு, தேவையான விவரங்களை வழங்கவும். தொடர்ந்து உங்கள் கணக்கினுள் சென்று, உதவி (Help) என்ற பகுதியை திறந்து அதில் குறிப்பிட்டிருக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலமும் உங்களுடைய கணக்கை மீட்டமைக்கலாம்.
* இன்ஸ்டாகிராம் அதன் வழிகாட்டுதல்களை நீங்கள் பின்பற்றிய பிறகும் உங்களை மீண்டும் மீண்டும் குற்றவாளி என்று கூறினால், உங்கள் முழுப்பெயர், பயனர் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் உங்கள் கணக்கு ஏன் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களைக் கொண்ட படிவத்தை நிரப்ப வேண்டும்
கருத்துகள் இல்லை