வெப்பமண்டல நாடுகளில் அதிகம் வளரும் இந்த செடி எந்த ஒரு பெரிய கஷ்டமும் கொடுக்காமல் எளிது வளரக் கூடியது. இதனை பராமரிப்பது மிகவும் எளிது. இந்த செடிக்கு அதிக தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த கற்றாழையை வேகவைத்து சாப்பிடுவது கசப்புத் தன்மை இல்லாமல் இருப்பதோடு, நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது.
ஊட்டச்சத்துக்கள் :
கற்றாழையில் மிருதுவான இலை பகுதி 96% தண்ணீரால் ஆனது. வைட்டமின், மினரல், ஆன்டிஆக்சிடெண்ட் , 7 முக்கிய நொதிகள், 20 க்கு மேற்பட்ட அத்தியாவசிய அமினோ அமிலங்கள் போன்ற உடலுக்கு தேவையான முக்கிய சத்துகளை கற்றாழை கொண்டிருக்கிறது. அதில் மிக அதிக அளவில் நீர்ச்சத்து தான் இருக்கிறது.
தண்ணீர், ஆற்றல், கார்போஹைட்ரேட், சர்க்கரை, கால்சியம், இரும்பு, சோடியம், வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன அதில் 90 சதவீதம் நீர்ச்சத்து தான் இருக்கிறது
வேகவைத்த கற்றாழை
கற்றாழையை வேகவைத்து சாப்பிடும் போது, கசப்புத் தன்மையையும் நீங்கும். கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் உப்பு மற்றும் வறுத்த சீரகம் சேர்க்கவும். இதனை உங்கள் சாண்டவிச் அல்லது ஸ்டார்டர் உணவுகளில் மேலே தூவி உட்கொள்ளலாம். தண்ணீர் பதம் அதிகம் உள்ள கற்றாழை வேகவைப்பதால் மிகவும் மென்மையாக மாறுகிறது. இதனை வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
கற்றாழையின் நன்மைகள்
உறுதியான ஆதாரங்கள் இல்லாதபோதும் , கற்றாழை மிக அதிக நன்மைகளை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. அழற்சி, தொற்று பாதிப்பு, எரிச்சல், தீக்காயம், செரிமான பிரச்சனை, அஜீரணம், வீக்கம் போன்ற பாதிப்புகளைக் குணப்படுத்த கற்றாழை உதவுகிறது.
கற்றாழை சாறு உட்கொள்வதால் அல்சர் மற்றும் இதர செரிமான கோளாறுகள் தடுக்கப்படுகின்றன.
கற்றாழை ஜெல் சருமத்தில் மேற்புறம் தடவுவதால் சருமத்தில் உண்டான காயங்கள், தடிப்புகள், கட்டிகள் மற்றும் எக்சிமா போன்ற பாதிப்புகள் குணமடைகிறது. தீக்காயம், சூரிய வெப்பத்தால் உண்டான காயம் போன்றவற்றால் உண்டாகும் புண்களைப் போக்க பல காலமாக கற்றாழை சாறு பயன்படுத்தப்படுகிறது. விரைவாக புண்ணை ஆற்றும் தன்மை கற்றாழைக்கு உண்டு.
நீரிழிவு
வாய்வு அமிலத்தை குறைவாக சுரக்கச்செய்து நெஞ்செரிச்சலுக்கு முதன்மை காரணமான எதுக்களித்தலைப் போக்க உதவுகிறது கற்றாழை. நீரிழிவு பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் நீரிழிவிற்கு முந்தைய நிலையில் இருக்கும் நோயாளிகள் ஆகியோருக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட ஆராய்ச்சியில் கற்றாழை க்ளைகோமிக் கட்டுப்பாட்டிற்கு உதவுவதாகவும், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது.
மூட்டு வலி
கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக கீல்வாதம் தொடர்பான மூட்டு வலி மற்றும் வீக்கம் ஆகியவை குறைகிறது. கீல்வாதத்துடன் தொடர்புடைய அழற்சியைத் தடுத்து , மூட்டுகளில் உண்டான காயத்தை அமைதிப்படுத்த கற்றாழை சாறு உதவுகிறது.
வாய் துர்நாற்றம்
கற்றாழையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு பற்கள் மற்றும் ஈறுகள் தொடர்பான தொற்று பாதிப்பு மற்றும் காயங்களை போக்க உதவுகிறது. கற்றாழை பவுடர் கொண்டு தினமும் பற்களை தேய்ப்பதால் எந்த ஒரு தொற்று பாதிப்பு , வாய் அல்சர் , பற்குழி போன்றவை குணப்படுத்தப்படுகிறது . உங்கள் ஈறுகளை பலமாக்க, ஒவ்வொரு முறை கற்றாழை சாறு பருகும்போதும், அதனை விழுங்குவதற்கு முன்னர் ஒரு முறை கொப்பளித்து விட்டு பின்பு விழுங்கவும்.
கருத்துகள் இல்லை