கொத்து உள்ளிட்ட சில உணவுகளின் விலைகள் குறைப்பு
(18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து உள்ளிட்ட சில உணவுகளின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.
அத்துடன், அனைத்து ஹோட்டல்களிலும் உணவுப் பொருட்களின் விலைப் பட்டியலை காட்சிப்படுத்துவதை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை