• Breaking News

    அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்


     



    சுகாதார சேவையின் ஒரு தொழிற் பிரிவை மாத்திரம் வித்தியாசமாக செயற்படுத்துவது அநீதியாகும். ஓய்வு பெறும் வயதை நீடித்து, நீண்டகாலத்துக்கு சேவையில் இருப்பதற்கு அனுமதி வழங்குவது விசேட சலுகை அன்றி, சேவை நிமித்தமானது அல்ல என சுகாதார நிபுணர்களின் தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். 

    அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 என அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் வைத்தியர்களுக்கு மாத்திரம் 60 வயதை தாண்டி சேவை செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

    தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

    ஓய்வு பெறும் 60 வயதை தாண்டி சேவை செய்வதற்கு வைத்தியர்களுக்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கினால் சுகாதார தொழிற்சங்கம் நீதிமன்றம் செல்வதற்கு தயாராக உள்ளது.

    அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக வைத்திய அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய சுகாதார தொழிலாளர்கள் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு கீழ்ப்பட்டு செயற்படுகின்றது.

    நீதிமன்றத்தை நாடுவோம் என்றாலும் சுகாதார சேவையின் ஒரு தொழிற் பிரிவை மாத்திரம் வித்தியாசமாக செயற்படுத்துவது அநீதியாகும். ஓய்வு பெறும் வயதை நீடித்து, நீண்டகாலத்துக்கு சேவையில் இருப்பதற்கு அனுமதி வழங்குவது விசேட சலுகை அன்றி, சேவை நிமித்தமானது அல்ல.

    மருத்துவர்களாக சுகாதார அமைச்சில் மருத்துவ நிர்வாக அதிகாரிகள் பாரியளவிலானவர்கள் இந்த சிறப்பு சலுகையை அனுபவிக்க இருக்கின்றார்கள். இதன் காரணமாக சுகாதார சேவையின் செயற்திறமையை அதிகரிப்பதற்கு இருந்த வாய்ப்பு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    வைத்தியர்களுக்கு மாத்திரம் இவ்வாறு சிறப்பு சலுகை வழங்குவது சேவை நிமித்தம் அல்ல. இதுதொடர்பாக உண்மை தகவல்களை வெளிப்படுத்தாமல், சுகாதார அமைச்சு நாட்டை பிழையாக வழிநடத்தி வருகின்றது.

    அதனால் ஓய்வு பெறும் வயது தொடர்பில் சுகாதார ஊழியார்கள் அனைவருக்கும் நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால் எமது தொழிற்சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad