• Breaking News

    யாழில் புத்தாக்கம் படைப்போர் மற்றும் தொழில் முனைவோருக்கு அரிய சந்தர்ப்பம்!

     


    Yarl it hub என்ற நிறுவனத்தால் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் படைப்போருக்கான மாபெரும் கண்காட்சி திருவிழா ஒன்று ஏற்பாடு செயாயப்பட்டுள்ளது. அதனை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.


    குறித்த ஊடக சந்திப்பில் yarl it hub இன் தன்னார்வலர் திரு.சிவரதன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

    Yarl it hub ஆனது இலாப நோக்கற்ற ஒரு தன்னார்வ நிறுவனம். நாங்கள் வடக்கில் முக்கியமாக புதுமை (innovation), தொழில்நுட்பம் (technology), தொழில்முனைவு (entrepreneurship) இந்த மூன்றினையும் அதிகரிப்பதற்காக கடந்த 13 வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கின்றோம். 

    இதற்காக நாங்கள் பல்வேறு வயதுப் பிரிவினர்களிடையே பல்வேறு செயற்திட்டங்களை செய்து கொண்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் எனறால் entrepreneurship club  என்ற கழகம் ஒன்றினை உருவாக்கியுள்ளோம்.

    பாடசாலை கல்வி நிறைவடைந்து பல்கலைக்கழக அனுமதி கிடைத்தவர்களுக்கு 100% புலமை பரிசிலான ஒரு coding school (ஊக்கி) என்றொரு செயற்றிட்டத்தை செய்கின்றோம். புத்தாக்க சிந்தனைகளுடன் இருப்பவர்களுக்கு அதனை ஒரு வணிகமாக எப்படி மாற்றுவது, அந்த வணிகத்தை எப்படி சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்வது என்பதற்கான உதவித் திட்டங்களை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.

    இப்படி செய்கின்ற செயற்திட்டத்தை நாங்கள் ஒழுங்குப்படுத்தி ஒவ்வொரு வருடமும் ஒரு புத்தாக்க திருவிழாவாக செய்து வருகின்றோம். இந்த திருவிழாவானது ஓகஸ்ட் 2,3 மற்றும் 4ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.

    இங்கு சிறுவர் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் புதுமையான விடயங்களை காட்சிப்படுத்த உள்ளோம். உதாரணமாக பாடசாலை மாணவர்களின் கண்டுபிடிப்புகள், ஒரு தொழிலை தொடங்கி பல்வேறு பகுதிகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களது கண்டுபிடிப்புகள், போட்டிகள், பனையோலையில் பொருட்களை எப்படி செய்வது, களிமண்ணில் பொருட்களை எப்படி செய்வது போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி இந்த மூன்று நாள் திருவிழா நடைபெற உள்ளது.

    இந்த YGC புத்தாக்க திருவிழாவிற்கு அனுமதியானது முற்றிலும் இலவசம். இந்த உலகம் எப்படி அடுத்த கட்ட நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதை இங்கே நேரடியாக பார்க்கலாம். 

    முகநூல் - Yarl it hub, இணையத்தளம் - yarlithub.org, மின்னஞ்சல் - event@yarlithub.org என்பவற்றின் ஊடாக எம்மை தொடர்புகொண்டு உங்களது புத்தாக்கங்களை காட்சிப்படுத்த முடியும் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad