தேர்தல் காலத்தில் சட்டவிரோத இடமாற்றம்
ம.தென்.எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி முகாமையாளராக கடமை புரிந்த
வே. வரதராஜன் என்பவர் தற்போது மண்முனை தென் மேற்கு , பட்டிபளை பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் பெற்று கடந்த 21.10.2024 திகதி சென்றுள்ளார்.
தற்போது தேர்தல் காலம் நடைபெற்று கொண்டு இருக்கிறது அதனை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ஆணைக்குழுவின் கட்டளைகளை மீறி குறித்த இடமாற்றம் நடைபெற்று உள்ளது.
இதன் பின்னணியில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் , களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் , அரசாங்க அதிபர் உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கருத்துகள் இல்லை