புலிகள் காலத்தில் பட்டிச் சாவில்லை - தமிழரின் தன்னிறைவு பொருளாதாரம் அவசியம்!
புலிகள் காலத்தில் பட்டினியால் இந்த ஒரு மக்களும் பிறந்ததாக இதுவரை வரலாறு இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளர் மிதிலைச் செல்வி ஸ்ரீரங்கநாதன் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு தன்னிறவு பொருளாதார நீதியாக கட்டமைக்கப்பட்ட ஒரு இனமாக வாழ்ந்து வந்த நிலையில் அந்த பொருளாதாரம் தற்போது அழிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் மக்களுடைய வளமான விளைநிலங்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ள நிலையில் அநேகமான வளமான விளை நிலங்களில் பாதுகாப்பு தரப்பினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புலிகள் காலத்தில் யுத்தம் இடம்பெற்றபோது வடபகுதிக்கு சிங்கள அரசாங்கம் பல்வேறுபட்ட பொருளாதார தடைகளை விதித்த நிலையிலும் தமிழ் மக்கள் தன்னிறைவு பொருளாதாரத்தில் வாழ்ந்து வந்தார்கள் பட்டினியாள் எவரும் இறக்கவில்லை.
தற்போது நாட்டிலே ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றம் காரணமாக ஒருவேளை உணவை கூட உன்ன முடியாத பல குடும்பங்கள் காணப்படுகின்றன.
அதுமட்டுமல்லாது தனியார் துறை வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கின்ற நிலையில் இன்னும் பலர் வேலை வாய்ப்பினை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட உள்ளது.
நான் ஒரு வங்கியில் சார்ந்த துறையில் 30 வருடத்திற்கு மேலான அனுபவத்தை கொண்டுள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான சரியான திட்டமிடல்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவர் தனது குடும்பத்து பணத்தை அனுப்புகிறாரோ அதேபோன்று இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடமிருந்து நிதியை பெற்று நாட்டு மக்களுக்கு வழங்குகிறது.
இவ்வாறான நடைமுறை ஒரு அபிவிருத்தியை இலக்காக கொண்டு பயணிக்கும் நாட்டுக்கு உகந்ததாக இல்லை.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நாட்டின் உற்பத்தி துறைகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடுகள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் சரிவரச் செய்யவில்லை
ஆகவே தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கான அரசியல் பலத்தினை வழங்கும் போது புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீடுகளை எமது பிரதேசத்திற்கு கொண்டுவர முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை